Thursday, March 11, 2010

சூரிய விரோதம்

கருந்தோல்
வெயில் அங்கி

உடல் கன்றிச் சிவந்து
ஒளி குடிக்கும் தாவரம்

சிறு களைகொத்தியுடன்
தன் நிலம் திருத்தித் தவழும்

உடல் சுக்கென
வற்றி வதங்கிய
பெருந்தெய்வம்
என் அன்னை

பனை தாங்கும்
வெப்பம்
தான் தாங்குமவள்
சரீரம் பூத்த
வியர்வையையும் விடாமல்
நக்கி உறிஞ்சும்
கொடுஞ் சூரியன்

கைக்குக் கிடைப்பானெனில்
இவ் அரிவாளால்
வெட்டித் தரிப்பேன்
ஒரு சுள்ளி போலே

வே.ராமசாமி

1 comment:

Unknown said...

வார்த்தைகளில்... உணர இயலா...!


அருமை ... நண்பரே...